"எம்.ஜி.ஆர் மலையாளி, ஜெயலலிதா பிராமணர்..." "இருந்தாலும் திராவிடர் தலைவராக ஏற்றுக் கொண்டோம்..." அமைச்சர் 'செல்லூர் ராஜு' பரபரப்பு பேச்சு...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Feb 28, 2020 08:59 AM

எம்ஜிஆர் மலையாளியாக இருந்தாலும், ஜெயலலிதா பிராமணராக இருந்தாலும் இருவரையும் திராவிடர் தலைவராக ஏற்றுக் கொண்டோம் என அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.

sellurraju says admk accepted brahmin jayalalitha, malayali mgr

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளை  முன்னிட்டு மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் செல்லூர் ராஜு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சாதனைக்கு மேல் சாதனை படைத்து வருகிறார்.எடப்பாடியை சாதாரணமாக எடைபோட்ட  அனைவரும் பின் நோக்கி செல்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர் மலையாளியாக இருந்தாலும் அவர் ஆரம்பித்த கட்சியை ஒன்றரை கோடி தொண்டர்கள் தூக்கி நிறுத்தி இருக்கிறோம். ஜெயலலிதா பிராமணராக இருந்தாலும் அவரை திராவிட கட்சியின் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

ஆண்களை விட பெண்கள்தான் நிர்வாகத்தில் சிறந்தவர்கள் என்று ஜெயலலிதா கூறியிருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர்,  விரைவில் வரப்போகிற மாநகராட்சி தேர்தலில்  மதுரையில் 53 விழுக்காடு பெண்களுக்கு வாய்ப்பு தரப்பட உள்ளதாகக் குறிப்பிட்டார்.

Tags : #SELLUR RAJU #MGR #JAYALALITHA #MADURAI