வீட்ல 'கொழந்தைங்கள' வச்சுக்கிட்டு... இப்டித்தான் பண்றதா?... 'மதுரை' நபரை தட்டித்தூக்கிய போலீஸ்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Feb 26, 2020 07:41 PM

தமிழகம் முழுவதும் சிறுவர்களின் ஆபாச படங்களை பரப்புபவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை பகுதியில் சிலர் குழந்தைகளின் ஆபாச படங்களை டவுன்லோடு செய்து சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாக மதுரை ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், மதுரை போலீசில் புகார் செய்தனர்.

Madurai Man arrested, for sharing Children images on Whatsapp

இதையடுத்து மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரப்பாளையத்தில் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது ஆரப்பாளையத்தை சேர்ந்த குமார் (40) என்பவர் செல்போன் வழியாக ஆபாச படங்களை டவுன்லோடு செய்து சமூக வலைதளங்களில் பரப்புவது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தனக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதாகவும், மதுரையில் உள்ள லாரி புக்கிங் கம்பெனி ஒன்றில் வேலை பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மொபைலில் சிறுமிகளின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் இருந்ததும் இதை அவர் 10-க்கும் மேற்பட்ட நண்பர்களுக்கு அனுப்பி இருப்பதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.