மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா... இனி இந்த நாட்டிலும் கிடைக்கும்... சந்தோஷத்தில் மக்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Feb 27, 2020 04:37 PM

தமிழகத்திலிருந்து முதல்முறையாக மதுரையின் ஜிகார்த்தண்டா ஏர் இந்தியா விமானம் மூலம் சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா Madurai Special Jigarthanda

தமிழகத்தின் பாரம்பரிய ஸ்நாக்ஸ்களான மணப்பாறை முறுக்கு, கோவில்பட்டி கடலை மிட்டாய், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா போன்ற உணவுப் பொருட்கள் இங்கு மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் வரவேற்பு உள்ளதுடன் அதிக தேவை இருப்பதால் அங்கெல்லாம் அடிக்கடி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், மதுரையின் பிரபலமான பானமான ஜிகார்த்தண்டா சிங்கப்பூரில் வரவேற்புடன் தேவை அதிகமாக இருப்பதால், ஏர் இந்தியா விமானம் மூலம் முதல் முறையாக சோதனை முறையில் 135 கிலோ ஜிகர்தண்டா புதன்கிழமை அனுப்பப்பட்டுள்ளது.

ஜிகர்தண்டாவிற்கு தேவையான பசும் பால், பாதாம்  பிசின், கடல் பாசி, சர்க்கரை மற்றும் உள்ளூரில் ஜிகர்தண்டாவிற்கு ஸ்பெஷலாக கையால் உருவாக்கப்படும் ஐஸ்கிரீம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் மதுரையிலிருந்து அனுப்பப்படுகின்றன. தற்போது ரமலான் நோன்பு தொடங்க உள்ளதால், அதிக எனர்ஜி கிடைக்கும் ஜிகர்தண்டாவின் தேவை சிங்கப்பூரில் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூரில் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, தினமும் ஜிகர்தண்டா விமானம் மூலம் ஏற்றுமதி செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

Tags : #MADURAI #SINGAPOREUNIVERSITY #SPECIAL #JIGARTHANDA