'கல்யாணத்துக்கு போகணும்' நகையைத் திருப்பி தாங்கன்னு... 'பொண்டாட்டி' சண்டை போட்டா... கடன் கேட்டேன் யாரும் குடுக்கல... 'குமரியில்' நடந்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Feb 21, 2020 03:18 PM

ஏலச்சீட்டு நடத்தி அதில் நஷ்டம் ஏற்பட்டதால் மகளைக் கொலை செய்து, மகனையும் கொலை செய்ய தந்தை முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Father Killed 3 year old Daughter in Kanyakumari, Police Investigate

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார்(35) என்பவர் பேரூராட்சியில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருக்கு 7 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் என மொத்தம் 2 குழந்தைகள். இருவரும் அருகில் உள்ள பள்ளிகளில் படித்து வந்தனர்.

கடந்த 12-ம் தேதி அடகுவைத்த நகைகளை மீட்பது தொடர்பாக செந்தில் குமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில் குமார் மகனை கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். மேலும் மகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டார். இதையடுத்து போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து செந்தில் குமாரை தேடி வந்தனர்.

இந்த நிலையில்  கோவை மாவட்டத்தில் பதுங்கி இருந்த செந்தில் குமாரை போலீசார் கைது செய்து அஞ்சு கிராமம் அழைத்து வந்தனர். விசாரணையில் அவர் கூறியதாவது:-

ஏலச்சீட்டு நடத்தி அதில் பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. அதற்காக என்னுடைய மனைவியின் நகைகளை அடகு வைத்தேன். சம்பவ தினத்தன்று ஒரு திருமணத்திற்கு செல்ல வேண்டும் நகைகளை திருப்பி கொடுங்கள் என என்னுடைய மனைவி சண்டை போட்டார். இதற்காக பலரிடம் கடன் கேட்டேன். யாரும் கொடுக்கவில்லை. எனவே தற்கொலை செய்துகொள்ள நினைத்தேன்.

நான் இறந்தால் என்னுடைய குழந்தைகள் அனாதைகளாகி விடுவார்கள் என நினைத்து அவர்களை கொலை செய்ய முயற்சி செய்தேன். என்னுடைய தந்தை வீட்டில் மகன் இருந்தான். அவனை கயிற்றால் இறுக்கியதில், மயங்கி விழுந்தான். அவன் இறந்து விட்டதாக கருதி என்னுடைய வீட்டிற்கு சென்றேன். அங்கு, மகள் மட்டும் இருந்தாள். மகளை தண்ணீர் தொட்டியில்  மூழ்கடித்து கொலை செய்தேன்.

இதற்கிடையில் என்னுடைய மகனை மனைவி, உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக அறிந்தேன். இதனால் வீட்டில் இருந்து தப்பித்து திருநெல்வேலி சென்று அங்கிருந்து மதுரை சென்று பின்னர் கோவை சென்றேன். நான் செல்ல நினைத்த உறவினரின் வீடு பூட்டிக் கிடந்ததால் கீழமேடு ரெயில் நிலையம் அருகில் உள்ள பாலத்துக்கு அடியில் பதுங்கி இருந்தேன். அப்போது போலீசார் என்னை கைது செய்தனர்.

இவ்வாறு அவர் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து செந்தில் குமாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.