தனியா 'நைட்ல' யாருகிட்ட பேசுறாரு?... கணவரின் மொபைலை பார்த்து 'அதிர்ந்து' போன புது மனைவி... புதுக்கோட்டையில் நடந்த பயங்கரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுக்கோட்டையின் பிரபல வங்கி ஒன்றில் காசாளராக பணிபுரியும் எட்வின் ஜெயக்குமார்(36) வங்கிக்கு வரும் பெண்களை மயக்கி உல்லாசத்தில் ஈடுபட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் இவருக்கும் தஞ்சையை சேர்ந்த பட்டதாரி பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆனதில் இருந்து ஜெயக்குமார் மனைவியிடம் இருந்து தள்ளியே இருந்துள்ளார். ஆனால் வீட்டிற்கு வந்து தனியறையில் மணிக்கணக்காக போன் பேசியிருக்கிறார். சமயங்களில் இவர் ஆபாசமாக பேசுவதை கேட்டு அதிர்ந்து போன அவரது மனைவி அவரின் மொபைலை எடுத்து பார்த்துள்ளார்.

அதில் எக்கச்சக்க பெண்களின் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் இருந்துள்ளன. மேலும் வங்கிக்கு வரும் பெண்களை மயக்கி அவர்களிடம் அவர் உல்லாசம் அனுபவித்த வீடியோக்களும் இருந்துள்ளன. அதேபோல் தன்னுடன் வங்கியில் வேலை பார்க்கும் பெண்கள், பெண் வாடிக்கையாளர்கள், தன்னுடைய வீட்டின் வெளியே வாசலை பெருக்கும் பெண்கள், மொட்டை மாடியில் துணி காயவைக்கும் பெண்களை அவர்களுக்கு தெரியாமல் ஆபாசமாக போட்டோக்களை எடுத்தும் வைத்துள்ளார்.இதையடுத்து அவரின் வீட்டில் சொல்ல அவர்கள் இதுகுறித்து கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். மேலும் தன்னுடைய மனைவிக்கு உண்மை தெரிந்ததை அறிந்து கொண்ட ஜெயக்குமார் அவரை 2 முறை கொலை செய்யவும் முயற்சி செய்துள்ளார்.
இதையடுத்து அந்த பெண் அவரது வீட்டிற்கு போன் செய்து தன்னை கொலை செய்ய முயற்சி செய்வதாக கதற, அவர்கள் வந்து அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். தொடர்ந்து தஞ்சை ஐஜியிடம் அந்த பெண் புகாரளிக்க ஜெயக்குமார் அவரின் அம்மா உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மனைவி புகாரளித்ததை அடுத்து ஜெயக்குமார் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஜாமீன் வாங்கி இருக்கிறார். இதைத்தெரிந்து கொண்ட ஜெயக்குமாரின் மனைவி தனது கணவரின் ஆபாச வீடியோ மற்றும் போட்டோக்களை மதுரை நீதிமன்றத்தில் காண்பித்ததையடுத்து ஜெயக்குமார் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத மேலும் 2 வழக்குகளை பதிவு செய்து அவரை உடனடியாக கைது செய்யுமாறு வல்லம் அனைத்து மகளிர் போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதி உத்தரவை அடுத்து அவர்மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமார் உட்பட 5 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
