ஏன் இதுவரைக்கும் 'விட்டு' வச்சிருக்கீங்க?... எல்லார் மேலயும் 'நடவடிக்கை' எடுங்க... விரைவில் 'மொத்தமாக' தூக்கப்போகும் போலீஸ்?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Feb 26, 2020 06:50 PM

குழந்தைகளின் ஆபாச படம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகம் என்ற தகவல் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் துரிதமாக செயல்பட்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் பட்டியலை தயார் செய்தனர். அதில் ஓரிரண்டு பேரை கைது செய்யவும், அடுத்து யாராக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. ஆனால் தொடர்ந்து அந்த பணியில் சுணக்கம் ஏற்பட்டது.

Child Pornography Issue: Police will be arrested 600 persons

இந்த நிலையில் ஆபாச படம் பார்த்து பிடிபட்ட 600 பேர் மீதும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் விரைவில் இது தொடர்பான நடவடிக்கை போலீஸ் தரப்பில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபுறம் இதுபோன்ற நடவடிக்கைகளால் ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.