‘சுற்றுலா’ சென்ற இடத்தில்... ‘அதிவேகத்தில்’ பின்னால் வந்த பேருந்தால் ‘கோர’ விபத்து... ‘மதுரையில்’ நேர்ந்த சோகம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Feb 08, 2020 10:06 PM

மதுரை அருகே  சுற்றுலா வேன் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Madurai 3 Woman From Haryana Killed In Van Bus Accident

ஹரியானாவிலிருந்து தமிழகத்திற்கு சுற்றுலா வந்த 41 பேர் மதுரை ரயில் நிலையத்திலிருந்து 2 வேன்களில் கன்னியாகுமரி செல்ல புறப்பட்டுள்ளனர். அதில் ஒரு வேன் நேசநேரி அருகே சென்றுகொண்டிருந்தபோது, அதன் ஓட்டுநர் வேனை சாலையோரமாக நிறுத்த முயன்றுள்ளார். அப்போது அதிவேகத்தில் பின்னால் வந்த தனியார் பேருந்து ஒன்று அதன்மீது மோதியதில், வேன் பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த கோர விபத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் விபத்தில் காயமடைந்த மற்றவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #ACCIDENT #MADURAI #TOURIST #WOMAN #BUS #VAN