‘இளைஞரின் செயலால்’... ‘உறைந்துப் போய் நின்ற போலீசார்’... 'மதுரையில் நடந்த பரபரப்பு சம்பவம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Feb 24, 2020 01:26 PM

மதுரையில் நண்பரின் தலையை துண்டித்து, அந்த தலையுடன் காவல்நிலையத்தில் இளைஞர் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Youth who cut off a friend\'s head and surrendered in Madurai

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் முனியாண்டி கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முத்துவேல். பன்றி இறைச்சி விற்பனை செய்து வரும் இவருக்கு அப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. திருமணம் ஆகாத நிலையில் அப்பகுதி இளைஞர்கள் பலருடன் நட்பில் இருந்து வந்துள்ளார். அவ்வாறு நட்பு வட்டாரத்தில் இணைந்தவர் தான் தப்பாட்டக் கலைஞர் நாகராஜன்.

இதற்கிடையில் நாகராஜனின் உறவுக்கார பெண் ஒருவரை கடத்தி சென்று, 4 நாட்கள் அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்து பின் அவரது வீட்டில் மீண்டும் முத்துவேல் கொண்டுவந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் முத்துவேல் மீது நாகராஜூவிற்கு தீராத கோபம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அலங்காநல்லூர் காவல் நிலையம் அருகே முத்துவேலை அழைத்து சென்ற நாகராஜன், வாங்கி வந்த மதுபானத்தை இருவரும் பங்கிட்டு அருந்தியுள்ளனர்.

முத்துவேல் நல்ல போதை ஆனதும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முத்துவேலின் கழுத்தை அறுத்த நாகராஜன், துடிக்க துடிக்க அவரை கொலை செய்து தலையை தனியாக துண்டித்ததாகத் தெரிகிறது. பின்னர் ரத்தம் சொட்ட சொட்ட கையில் தலையுடன் அருகில் இருந்த காவல் நிலையம் வந்த நாகராஜன், சம்பவத்தை கூறி சரணடைந்தார். அதிர்ந்து போன போலீசார் தலையை கைப்பற்றி உடல் இருக்கும் இடத்திற்கு கொண்டு வந்து சடலத்தை அடையாளம் கண்டனர்.

பின்னர் அவரது உடலை கைப்பற்றிய அலங்காநல்லூர் போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன்பிறகு நாகராஜனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CRIME #MADURAI #YOUTH #FRIEND