VIDEO: ‘சாப்பிட்ட PUFFS-க்கு காசு கேட்ட பேக்கரி ஊழியர்’.. கண்மூடித்தனமாக தாக்கிய இளைஞர்கள்.. பரபரப்பு வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரையில் சாப்பிட்ட பப்ஸுக்கு பணம் கேட்ட பேக்கரி ஊழியரை இளைஞர்கள் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை தல்லாகுளம் பகுதியில் கிறிஸ்டி மோசே என்பவர் பேக்கரி கடை ஒன்றை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு வந்த இளைஞர்கள் சிலர் பப்ஸ் வாங்கி சாப்பிட்டுள்ளனர். இதனை அடுத்து அவர்களிடம் கடை ஊழியர் ஒருவர் சாப்பிட்ட பப்ஸுக்கு பணம் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் கடை ஊழியரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னையில் பேக்கரி ஊழியரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த பேக்கரி ஊழியர் தனியார் மருத்துவமனையில் ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் தாக்குதல் தொடர்பாக பேக்கரி உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரில் அடிப்படையில் மூன்று பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
