'கூல்டிரிங்ஸ்ஸில் மயக்கமருந்து'.. ‘பாக்க அம்மா, மகன் மாதிரி இருந்தாங்க’.. மதுரை ரயில்வே ஸ்டேஷனில் பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Feb 18, 2020 07:09 AM

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து ரயில் பயணியிடம் 9 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Robbery in Madurai railway station using drugs mixed cold drinks

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கோட்டாறு பகுதியை சேர்ந்தவர் செல்லத்தாய் (64). இவர் மதுரை வாடிப்பட்டியில் உள்ள கோயில் ஒன்றுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார். சாமி தரிசனம் முடித்துவிட்டு ஊருக்கு செல்வதற்காக மதுரை ரயில் நிலையம் வந்துள்ளார். அங்கு ஒரு பெண்ணும், ஆணும் செல்லத்தாயிடம் பேச்சுக் கொடுத்துள்ளனர். பார்ப்பதற்கு தாய், மகன் போன்று இருந்ததால் அவர்களிடம் செல்லத்தாய் நட்பாக பேசியுள்ளார்.

அப்போது மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை செல்லத்தாயிக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை குடித்த செல்லத்தாய் மயங்கி விழுந்துள்ளார். இதனை அடுத்த அவரிடமிருந்த செல்போன், 3000 ரூபாய் பணம் மற்றும் கழுத்தில் இருந்த 9 சவரன் நகை உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

மயக்கம் தெளிந்தபின் நகை, பணம் மற்றும் செல்போன் பறிபோனதை அறிந்து அதிர்ச்சியடைந்த செல்லத்தாய், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பயணங்களின்போது முன்பின் தெரியாதவர்கள் கொடுக்கும் உணவை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.