‘நாம செம்மையா வாழ்ந்து காட்டுறதுதான் அவங்களுக்கு தண்டனை!’.. ‘குண்டாக இருந்ததால் கைவிட்ட காதலன்’.. ‘சிகரம் தொட்ட சிங்கப்பெண்!’
முகப்பு > செய்திகள் > கதைகள்உடல் பருமன் காரணமாக கேலியையும் கிண்டலையும் அனுபவித்த பெண் ஒருவர், தன் காதலனால் தான் குண்டாக இருப்பதாகக் கூறி, நிராகரிக்கப்பட்ட இளம்பெண் ஜென் அட்கின்.
பிரிட்டனைச் சேர்ந்த இந்த இளம்பெண் மேற்கண்ட சம்பவத்துக்கு பிறகு, மேலும் கடுமையான மன அழுத்தத்துக்கும் வேதனைக்கும் உள்ளாகினார். இந்த வருத்தத்தில் மேலும் அதிகமாக உணவு உண்ண ஆரம்பித்ததால், இவரது உடல் பருமன் இன்னும் அதிகரித்தது. இதனையடுத்து இவருக்கு இவருடைய நண்பர்கள் அளித்த ஊக்கத்தினாலும் மேலும் சிலர் அளித்த ஆலோசனையினாலும் இவர் தனது வாழ்க்கையை மாற்றி அமைக்க முடிவு செய்தார்
பல்வேறு சிரமமான முயற்சிகளுக்கும் பிறகு உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு என பலவற்றையும் மேற்கொண்டு அவற்றில் நல்ல பலன் கிடைத்ததால் மாடலிங் மற்றும் அழகிப் போட்டியில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். இதற்கென 108 கிலோ இருந்த அவரது உடல் எடையை 50 கிலோவாக குறைத்தார். பிறகென்ன..? ‘எங்கேடா அந்த பிரிட்டன் அழகிப்போட்டி?’ என்று தேடி அதில் கலந்து கொண்டார். இவரது விடாமுயற்சிக்கு மிஸ் பிரிட்டன் என்கிற டைட்டில் பட்டத்தையும் அவரே வென்றார். இதுபற்றி பேசிய ஜென் இந்த வெற்றி ஒரு நாளிலேயே ஒரு சில வாரங்களிலேயே வந்துவிடவில்லை என்றும் இதற்காக 2 வருடங்கள் தொடர்ந்து கடினமாக உழைத்ததாகவும் குறிப்பிட்டு தன்னுடைய இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
மேலும் தன்னை நிராகரித்த காதலன் பற்றி கூறிய ஜென்,
அந்த காதல் ஒரு வகையில் நிறைவேறாமல் போனது நல்லதுதான் என்றும் வெளிப்புற அழகை விட ஒருவரின் மனமும் ஆளுமையும்தான் எப்போதும் முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னைப் போல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உறுதுணையாகவும் தூண்டுதலாகவும் இருக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.