வீட்டில் யாருமில்லா நேரம் பார்த்து கல்லூரி மாணவர் செய்த விபரீத செயல்.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Feb 20, 2020 12:45 PM

மானாமதுரை அருகே கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Madurai college student commits suicide at home police investigate

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மழவராயனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கார்மேகம். இவரது மகன் செல்வா. இவர் மதுரையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல கல்லூரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து செல்வா விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து வீட்டுக்கு வந்த பெற்றோர், மகன் மயங்கி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு செல்வாவை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து வந்த போலீசார் கல்லூரி மாணவர் செல்வாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்த மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.