“சிங்கத்தைப் பிடித்துச் சென்ற எமனுக்கு..”.. ‘பரபரப்பை கிளப்பிய’.. ‘அஞ்சலி போஸ்டர்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரையில் ஏரியா பிரமுகர் ஒருவர் இறந்து போனதற்கு அவருடைய ஆதரவாளர்கள் எமனுக்கு கண்டனம் தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போஸ்டர் கலாச்சாரம் என்றாலே மதுரைக்கு மிகவும் நெருக்கமான கலாச்சாரங்களில் முக்கியமானதும் முதன்மையானதும் என்பது அனைவராலும் அறியப்பட்ட ஒன்று தான். இம்முறை ஒருபடி மேலே சென்று, மதுரை வடக்குமாசி வீதியைச் சேர்ந்த அய்யாவு என்கிற முதியவர் ஒருவர் இறந்த துக்கம் தாளாது அவருடைய ஆதரவாளர்கள் அவரின் இழப்பினை அனுசரிக்கும் பொருட்டு அவருக்கு ஒட்டிய கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் தங்களுடைய எதிர்ப்பை, வலுவான கண்டனத்தை எமதர்மராஜாவின் மீது திருப்பியுள்ளனர்.
அவ்வகையில், ‘சிங்கத்தை பிடித்துச் சென்ற எமதர்மனுக்கு கண்டனம்’ என்று அச்சடித்து அங்கங்கே போஸ்டட் ஒட்டி வைத்துள்ளனர். இது தவிர இந்த போஸ்டரில், இயற்கை எய்திய முதியவரின் ஆதரவாளர்களாக பீம்பாய் வினோத், சீடை வினோத், வேட்டையன் பிரித்வி, குதிரைக் குத்தி சரவணன், நாய்ப்பால் ரஞ்சித் என்று சிலரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
