“இன்னும் பயிற்சி வேண்டுமோ?”.. “திருடனுக்கு ஏற்பட்ட வேறலெவல் பங்கம்!”.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்

By Siva Sankar | Jan 31, 2020 12:28 PM

கிரிமியன்(Crimean) தீபகற்பம் ஐரோப்பாவில் புகழ்பெற்ற ஒன்று. இங்குள்ள நகைக்கடை ஒன்றின் கதவை எட்டி உடைக்க முயன்று, முடியாமல் காலை  உடைத்துக்கொண்ட திருடனின் வீடியோ இணையத்தில் வலம் வந்து பலரிடையே நகைப்புணர்வை ஊட்டியுள்ளது.

bungling armed robber breaks his leg and drops his plan

மேற்கண்ட தீபகற்பத்தில் உள்ளது சிம்ஃபெரோபோல்(Simferopol) நகரில் உள்ள நகைக்கடை ஒன்றிற்கு, கையில் துப்பாக்கியுடன் வரும் முகமூடித் திருடன் ஒருவன் அங்கிருந்த 4 வாடிக்கையாளார்களையும் அதட்டி தரையில் படுக்கச் சொல்கிறான்.  பின்னர் அங்கிருந்த கதவை சினிமா ஹீரோ போல் எட்டி உதைத்து திறக்க வைக்கப் பார்க்கிறான். ஆனால் 2 முறை கதவை உதைத்ததும் திருடனுக்கு கோபம் வந்துவிட்டது. இதனை அடுத்து 3 வது முறை கதவை  உதைக்கும் போது, கதவு உடையவில்லை. மாறாக கால்தான் உடைந்தது.

இதனால் கடுப்பான திருடன் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, திருடுவதற்காக வந்த தனது முயற்சியை கைவிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான். இதனையடுத்து இந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Tags : #THIEF #ROBBERY #VIDEOVIRAL