‘ரிமோட் பேட்டரியை விழுங்கிய 2 வயது குழந்தை’.. தொண்டையில் சிக்கிய பரிதாபம்.. மதுரை அருகே அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் எதிர்பாராதவிதமாக ரிமோட் பேட்டரியை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஏ.கோம்பை கிராமத்தை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகன் ஆதிஸ்வரன் (2). வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ரிமோட் பேட்டரி ஒன்றை சிறுவன் விழுங்கியுள்ளான். இதனால் வலியில் துடித்த சிறுவனை அவனது பெற்றோர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு சிறுவனை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் தொண்டையில் பேட்டரி சிக்கியிருந்ததை கண்டுபிடித்தனர். தொண்டையில் சிக்கியிருந்ததால் சீராக மூச்சுவிட முடியாமல் சிறுவன் துடித்துள்ளான். இதனால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து தொண்டையில் இருந்த ரிமோட் பேட்டரியை மருத்துவர்கள் அகற்றினர். தற்போது சிறுவன் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
