எந்த சீர்வரிசையும் 'வேணாம்னு' சொன்னாங்க... கடைசில என் 'பொண்ண' இப்டி பாப்பேன்னு... கதறிய தந்தை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Feb 18, 2020 01:06 AM

திருமணமாகி 16 நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Newly Married Woman Suicide near Udumalai, Police Investigate

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த ரகுபதி(32) என்பவருக்கும் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த தீபா(18) என்பவருக்கும் கடந்த 30-ம் தேதி உடுமலையில் வைத்து திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப்பின் கணவருடன் தீபா வசித்து வந்தார்.

திருமணமாகி 16 நாட்கள் கழித்து திடீரென தீபா தூக்குப்போட்டு இறந்ததாக ரகுபதி தீபாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விரைந்து வந்த அவர்கள் மகளின் உடலைப்பார்த்து கதறியழுதனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் தீபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் தீபாவின் தந்தை தன்னுடைய மகள் சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார் தெரிவித்து இருக்கிறார். அதில் அவர்,''என்னுடைய மகள் புகைப்படத்தை பார்த்துத்தான் ரகுபதி குடும்பத்தினர் பெண் கேட்டு வந்தனர். என்னிடம் தற்போது பணம் இல்லை என்று கூறினேன். அதற்கு அவர்கள் பரவாயில்லை நீங்கள் பெண்ணை மட்டும் கொடுத்தால் போதும் என்று கூறி என்னுடைய மகளுக்கு நகை மற்றும் திருமண செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டனர்.

திருமணத்திற்கு பின் என்னுடைய மகள் அடிக்கடி போனில் நலம் விசாரிப்பாள். சம்பவ தினத்தன்று மதியம் 1.30 மணியளவில் என்னுடைய மகள் போன் செய்தாள். தொடர்ந்து 3.30 மணியளவில் ரகுபதி எங்களுக்கு போன் செய்து என்னுடைய மகள் தூக்குப்போட்டு இறந்து விட்டதாக தெரிவித்தார். நாங்கள் அங்கு சென்றபோது என்னுடைய மகளின் கால் தரையில் தொட்டபடி இருந்தது. மேலும் என்னுடைய மகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை அல்ல. என்னுடைய மகள் சாவில் சந்தேகம் இருக்கிறது,''என தெரிவித்து இருக்கிறார்.

இதையடுத்து தீபாவின் தற்கொலை தொடர்பாக தற்போது ஆர்.டி.ஓ தற்போது ரகுபதியிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : #POLICE