டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த ‘ஸ்கூல் வேன்’.. 20 மாணவர்கள் படுகாயம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jan 28, 2020 03:16 PM

மதுரை அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

School bus met with accident 20 injured in Madurai

சிவகங்கை மாவட்டம் மணலூர் அருகே தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் மதுரை பூஞ்சுத்தி, சுண்ணாம்பனூர், திருவாதவூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்களும் பயின்று வருகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல நேற்று காலை பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு வேன் சென்றுகொண்டு இருந்துள்ளது.

அப்போது சுண்ணாம்பனூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணித்த பள்ளி மாணவர்கள் 20 பேருக்கு காயம் ஏற்பட்டது. இரண்டு குழந்தைகளுக்கு கை, கால் முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்