தூக்குப்போடுவது எப்படி? என்று 'மனைவியிடம்'... நடித்துக்காட்டிய 'புதுமாப்பிள்ளை'க்கு... நேர்ந்த விபரீதம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூக்குப்போடுவது எப்படி? என்று மனைவியிடம் நடித்துக்காட்டிய புதுமாப்பிள்ளை சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரை சோலையழகுபுரம் பகுதியை சேர்ந்தவர் முஹம்மது அலி (22) லாரி நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் இவருக்கு 2 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் சம்பவ தினத்தன்று முஹம்மது அலி விளையாட்டாக மனைவியிடம் தூக்குப்போடுவது எப்படி? என்று நடித்துக்காட்டி இருக்கிறார்.
அப்போது நாற்காலி சரிந்து கீழே விழ, கயிறு முஹம்மது அலியின் கழுத்தை இறுக்கியது. இதைப்பார்த்த அவரது மனைவி கத்தி, கூச்சலிட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு நிலைமை மோசமானதால் அவரை மதுரை அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். விளையாட்டாக செய்த சம்பவத்தால் புதுமாப்பிள்ளை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
