"கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக"... "தனி வார்டு" அமைத்த மதுரை அரசு மருத்துவமனை!...
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை ராஜாஜி மருத்துவமனையில், கொரோனா வைரஸ் பாதிப்பிற்கென பிரத்யேக வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் பலியானோரின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,515 ஆக இருந்தது.
இந்நிலையில், சீனாவில் இருந்து வருவோரை கண்காணிக்க நாடு முழுவதும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், அங்கிருந்து வருவோரையும் முழுவதுமாக பரிசோதித்து கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் பட்சத்தில், அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவும் மத்திய சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோன வைரஸ் பாதிப்பு குறித்த நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அதில் 8 படுக்கைகள் அமைக்கப்பட்டதுடன், சிறப்பு சிகிச்சை அளிக்க 2 நுரையீரல் சிகிச்சை பிரிவு மருத்துவர்கள், 2 பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்கள், பொது மாணவர்கள், செவிலியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.