"அக்கா அந்த சில்லரைய எடுங்க..." நொடியில் '15 பவுன் நகை' அபேஸ்... திருடறதுல தாத்தா காலத்து 'டெக்னிக்கா' இருந்தாலும் 'ஏமாறும் பெண்கள்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Feb 06, 2020 04:16 PM

நெல்லையில் ஓடும் பேருந்தில் கைக்குழந்தையுடன் வந்த பெண்ணிடம் ரூ.4 லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துச் சென்ற பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Woman robbed jewelery worth Rs 4 lakh-Police are investigating

தூத்துக்குடியிலிருந்து, நெல்லைக்கு மகேஸ்வரி என்பவர் கைக்குழந்தையுடன் பேருந்தில் சென்றுள்ளார். அப்போது மகேஸ்வரி அருகே 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அமர்ந்து இருந்தார். அவர் அவ்வப்போது, மகேஸ்வரியின் கைக்குழந்தையை தூக்கி கொஞ்சினார்.

அந்த பஸ் பாளை கே.டி.சி. நகர் அருகே வந்த போது, கைக்குழந்தையை தூக்கும் சாக்கில் அருகில் இருந்த பெண் தன் கையில் வைத்திருந்த சில்லறை காசை கீழே போட்டார். பின்னர் வேண்டும் என்றே மகேஸ்வரியிடம் அந்த சில்லறை காசை எடுத்து தரும் படி கூறியுள்ளார். மகேஸ்வரியும், தன் கைக்குழந்தையை தூக்கி வைத்துள்ளாரே என்று கீழே குனிந்து ஒரு ரூபாய் நாணயத்தை தேடி எடுத்துக் கொடுத்துள்ளார்.

அந்த கேப்பில் மகேஸ்வரின் கைப்பையில் இருந்த 15 பவுன் தங்க நகைகளை அந்த பெண் எடுத்து மறைத்து வைத்துக் கொண்டார். அதன்பிறகு மகேஸ்வரி நெல்லை புதிய பேருந்து நிலையம் சென்ற பிறகு தான் தன்னிடம் இருந்து நகைகள் திருடப்பட்டிருப்பதை உணர்ந்தார். இதுகுறித்து மகேஸ்வரி, மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். கொள்ளை போன நகைகளின் மதிப்பு 4 லட்சம் ரூபாய் இருக்கும் எனத் தெரிகிறது.

Tags : #ROBBERY #GOLD #THIRUNELVELI #WOMEN THIEF