'போட்டாபோட்டி'..குரோம்பேட்டை அருகே கார் மோதி.. தூக்கி 'வீசப்பட்ட' காவலர் உயிரிழப்பு.. மாணவர் கைது!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Nov 10, 2019 01:39 PM

சென்னை குரோம்பேட்டை அருகேயுள்ள ஜி.எஸ்.டி சாலையில் சிக்னலில் திரும்ப காத்திருந்த தலைமைக் காவலர் ரமேஷ்(45) என்பவர் மீது வேகமாக வந்த கார் ஒன்று மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Police dies as car rams into bike in Chennai student arrested

சேலையூர் காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் ரமேஷ் தனது இருசக்கர வாகனத்தில் சிக்னலில் திரும்புவதற்காக, ஜி.எஸ்.டி சாலையில் காத்திருந்தார். அப்போது போட்டாபோட்டி போட்டுக்கொண்டு சாலையில் படுவேகமாக காரை ஓட்டி வந்த கல்லூரி மாணவர் ஆதித்யா(23) இருசக்கர வாகனத்தின் பின்புறம் இடித்தார்.

இதில் தூக்கி வீசப்பட்ட ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மாணவர் ஆதித்யாவைக் கைது செய்த போலீசார் விபத்து குறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #ACCIDENT