‘சென்னையில் சாலையோரம் தூங்கியவர்கள் மீது’.. ‘ஆட்டோ மோதி நொடியில் நடந்த கோர விபத்து’.. ‘அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Nov 05, 2019 01:04 PM

சென்னையில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது ஆட்டோ மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Chennai Accident Video Auto Runs Over Woman Sleeping On Roadside

தண்டையார்பேட்டையை சேர்ந்த காளியப்பன் என்பவர் இன்று அதிகாலை தனது ஆட்டோவில் பயணி ஒருவரை ஏற்றிக்கொண்டு சென்ட்ரலில் இருந்து கிளம்பியுள்ளார். அங்கிருந்து அவர் வேகமாக சென்றுகொண்டிருந்தபோது திடீரென சாலை நடுவே 2 நாய்கள் ஓடியதால் காளியப்பன் பிரேக் பிடித்ததில் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

இதில் தாறுமாறாக ஓடிய ஆட்டோ அருகே சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது ஏறியுள்ளது. இந்த கோர விபத்தில் அஞ்சலை என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இதில் படுகாயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் ஆட்டோ ஓட்டுநர் காளியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின்போது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CHENNAI #ACCIDENT #AUTO #ROADSIDE #WOMAN #DEAD #INJURED #CCTV #VIDEO