‘தூக்க கலக்கம்’... ‘லாரி மீது மோதிய அரசுப் பேருந்து’... ‘அலறிய பயணிகள்’... '15 பேருக்கு நேர்ந்த சோகம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Nov 02, 2019 11:52 PM
சென்னையில், கண்டெய்னர் லாரி மீது, அரசுப் பேருந்து மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில், நடத்துநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் நெல்லூரில் இருந்து, கோயம்பேடு நோக்கி அரசுப் பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. அதிகாலை சுமார் 2.45 மணியளவில், சென்னை பாடி மேம்பாலம் பகுதியில் அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னாடி சென்றுகொண்டிருந்த கண்டெய்னர் மீது, அரசுப் பேருந்து வேகமாக மோதியது. இதனால் பயணிகள் அலறினர். இதில் பேருந்தில் பயணம் செய்த ஓட்டுநர், நடத்துநர் உட்பட 15 பயணிகள் பலத்த காயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தின் போது பலத்த காயமடைந்த நடத்துநர் வீரமுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். காயமடைந்த ஓட்டுநர் உட்பட, 15 பேருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணையில் ஓட்டுநர் கோவிந்தசாமி, தூக்க கலக்கத்தில் வாகனத்தை இயக்கியதே, விபத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது. மேலும் விபத்திற்க்கு உள்ளான கண்டெய்னர் ஓட்டுனர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.