‘அதிவேகத்தில் வந்த மகனுடைய காரால்’.. ‘நொடிப்பொழுதில் தாய்க்கு நடந்த கோர விபத்து’..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Nov 06, 2019 01:29 PM

ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிவேகத்தில் வந்த மகனுடைய காரால் ஏற்பட்ட விபத்தில் தாய் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

UAE Car Accident Indian Teen boy runs over mother

சார்ஜா நகரின் முவெய்லா பகுதியில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி வசித்து வந்துள்ளனர். அவர்களுடைய 17 வயது மகன் கார் ஓட்டப் பழகி வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஓட்டுநர் பயிற்சி வகுப்புச் சென்றுள்ளார். அப்போது அவருடைய தாய் வீட்டிற்கு அருகே உள்ள பூங்காவிற்கு வெளியே உட்கார்ந்திருந்துள்ளார்.

பின்னர் பயிற்சி வகுப்பு முடிந்து வீடு திரும்பிய மகன் காரை நிறுத்த முயன்றபோது பிரேக்கிற்கு பதிலாக தவறுதலாக ஆக்சிலேட்டரை மிதித்துள்ளார். இதனால் நொடியில் அதிவேகத்தில் முன்னோக்கிச் சென்ற கார் வெளியே இருந்த அவருடைய தாயின் மீது ஏறியுள்ளது. இந்த விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய மகனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #UAE #ACCIDENT #CAR #MOTHER #SON #DRIVING #SCHOOL #STUDENT