‘அதிவேகத்தில் பிரேக் பிடிக்காமால்’... ‘தாறுமாறாக ஓடிய லாரி’... ‘எதிரே வந்த அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி’... 'நிகழ்ந்த கோர விபத்தில், 12 பேர் பலி!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | Nov 08, 2019 11:51 PM
அதிவேகத்தில் வந்த கன்டெய்னர் லாரி ஒன்று, சாலையில் தாறுமாறாக ஓடி, எதிரே வந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி, நடந்த கோர விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், திருப்பதி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தண்ணீர் கேன்களுடன் கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. சித்தூர் மாவட்டம் பங்காரு பாளையத்தில் உள்ள காட் ரோடு சாலையில் வந்தபோது, பிரேக் பழுதாகி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓட லாரி ஆரம்பித்தது. பின்னர் அங்கிருந்த சாலை தடுப்பில் இடித்துக்கொண்டு, எதிரே வந்த வேன் மீது மோதிய லாரி, அதன்பின்னால் வந்த பைக் மற்றும் ஆட்டோ மீதும் அடுத்தடுத்து மோதியது.
இந்த பயங்கர விபத்தில் பெண்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த பயங்கர விபத்து குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விபத்துக்குள்ளானவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.