‘ஹெல்மெட் இன்றி செல்ஃபோன் பேசியபடியே’.. ‘பைக்கில் வந்த சென்னை இளைஞருக்கு’.. ‘நொடியில் நடந்த பயங்கரம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Nov 07, 2019 06:46 PM

சென்னையில் செல்ஃபோனில் பேசியபடியே இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த இளைஞர் மரத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.

Chennai Man On Phone While driving Two Wheeler Dies In Accident

சென்னை நொளம்பூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்ற இளைஞர் செவ்வாய்க்கிழமை இரவு நண்பர்கள் 2 பேருடன் இருசக்கர வாகனத்தில் முகப்பேரை நோக்கி சென்றுகொண்டிருந்துள்ளார். பாடி மேம்பாலம் அருகே போய்க்கொண்டிருந்தபோது சக்திவேலுக்கு செல்ஃபோனில் கால் வந்துள்ளது. இதையடுத்து வாகனத்தை நிறுத்தி செல்ஃபோனை எடுத்த சக்திவேல் பின் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டியுள்ளார்.

பின்னர் சக்திவேல் செல்ஃபோன் பேசுவதில் முழு கவனத்தையும் செலுத்த, நொடியில் இருசக்கர வாகனம் தடுமாறி இடதுபக்கம் இருந்த மரத்தின்மீது மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட சக்திவேல் ஹெல்மெட் அணியாததால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த அவருடைய 2 நண்பர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #CHENNAI #ACCIDENT #TWOWHEELER #PHONE #MAN #FRIENDS #DEAD #INJURED