‘நடுரோட்டில் திடீரென தீப்பிடித்த’... ‘தனியார் சொகுசுப் பேருந்து’... 'பதறிப்போன பயணிகள்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Nov 08, 2019 12:23 PM

பொத்தேரி அருகே, சாலையில் சென்றுகொண்டிருந்த தனியார் ஏ.சி. பேருந்து ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

private ac bus fire accident in potheri, no casualties

சென்னையிலிருந்து தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஏ.சி. பேருந்து ஒன்று, பயணிகளை ஏற்றிக்கொண்டு குமுளி நோக்கி, கடந்த வியாழகிழமை இரவு சென்றுள்ளது. செங்கல்பட்டை அடுத்த பொத்தேரி அருகே சென்றபோது, பேருந்தின் எஞ்சின் பகுதியில் திடீரென தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால், தீ பேருந்தின் உள்ளே வேகமாக பரவியதால், பதறிப்போன ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்திவிட்டு, பயணிகள் அனைவரையும் கீழே இறங்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

தீ மளமளவென பற்றி எரிய ஆரம்பித்ததால், பயணிகள் தங்களது உடைமைகளை விட்டுவிட்டு கீழே இறங்கியுள்ளனர். இந்நிலையில், பேருந்து முழுவதும் தீ பற்றிக் கொண்டு எரிய ஆரம்பித்தது. தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு துறையினர், 2 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஆனாலும் பேருந்தின் பெரும்பாலான பகுதி எரிந்து உருக்குலைந்தது.பயணிகளின் உடைமைகள் தீயில் எரிந்துள்ள நிலையில், இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #ACCIDENT #FIRE #CASUALTIES #NO #PRIVATE #BUS