'நிக்க மாட்டீங்க?'.. 'காவலர் தூக்கி வீசிய லத்தி!'.. 'பைக் டயரில் சிக்கி'.. 'இளைஞர்களுக்கு' நடந்த 'விபரீதம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Nov 05, 2019 10:24 AM
கோவை மாவட்டத்தி, விதிகளை மீறி இருசக்கர வாகனத்தில் சென்ற 3 இளைஞர்களை தடுத்து நிறுத்த முயன்ற காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் லத்தியை தூக்கி வீசியுள்ளார்.
ஆனால் வீசப்பட்ட லத்தி இளைஞர்களின் இருசக்கர வாகன சக்கரத்தில் பட்டு சிக்கிக் கொண்டதால், கணநேரத்தில் மூவரும் விழுந்து அடிபட்டு படுகாயமடைந்தனர். இதில் சர்தார் அலி என்கிற இளைஞருக்கு கால் எலும்பு முறிந்தது.
கோவை சங்கம்பாளையத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட கோட்டூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சம்பந்தம் என்பவரே இதற்குக் காரணம் என தெரிந்தது. இதனையடுத்து போலீஸாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பந்தத்தின் மீது துறை ரீதியான பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Tags : #TRAFFICCOP #TRAFFIC #ACCIDENT #COIMBATORE