‘பாதுகாப்புக்காக சென்ற போலீஸ் வேன்’.. ‘பேருந்துக்கு காத்திருந்தவர்கள் மீது மோதி கோர விபத்து’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Nov 09, 2019 03:06 PM

நெல்லை அருகே காவல்துறையினரின் வேன் டயர் வெடித்து ஏற்பட்ட கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Tirunelveli Woman Died 4 Injured In Police Van Accident

அயோத்தி வழக்கின் தீர்ப்பை ஒட்டி இன்று பாதுக்காப்புப் பணிக்காக நெல்லையிலிருந்து புளியங்குடி நோக்கி காவல்துறையினர் வேனில் சென்றுகொண்டிருந்துள்ளனர். கடையநல்லூரை அடுத்த சொக்கம்பட்டி அருகே போய்க்கொண்டிருந்தபோது திடீரென முன்பக்க டயர் வெடித்ததில் காவல்துறையினரின் வேன் தாறுமாறாக ஓடி அருகே பேருந்து நிறுத்தத்தில் இருந்தவர்கள் மீது மோதியுள்ளது.

இந்த கோர விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காவலர் ஒருவர் உட்பட 5 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு வேனை ஓட்டிவந்தவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags : #TIRUNELVELI #ACCIDENT #POLICE #VAN #BUS #BUSSTAND #WOMAN #DEAD #INJURED #AYODHYAVERDICT