‘காதல் கணவருக்கு நடந்த பயங்கரம்’.. ‘துக்கம் தாங்க முடியாமல்’.. ‘சென்னை அருகே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Nov 03, 2019 03:33 PM

சென்னை அருகே கணவர் சாலை விபத்தில் உயிரிழந்ததை தாங்க முடியாமல் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Woman Commits Suicide After Husband Dies In Accident Near Chennai

சென்னை அருகே உள்ள படப்பையை அடுத்த செரப்பணஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி (22). ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த இவர், ரசிதா (19) என்ற பெண்ணைக் காதலித்து  கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்ற பாலாஜி லாரி மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது உடல் அன்று மாலை அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

கணவர் இறந்தது முதலே துக்கம் தாங்க முடியாமல் அழுதுகொண்டே இருந்த ரசிதா, நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் விபத்தில் இறந்ததை தாங்க முடியாமல் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மன அழத்தம், மன உளைச்சல் உள்ளவர்கள் Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours), State suicide prevention helpline – 104 (24 hours), iCall Pychosocial helpline – 022-25521111 ( Mon – Sat, 8am – 10pm) போன்ற இலவச ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொண்டு பேசினால் அதிலிருந்து வெளிவர ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

Tags : #CHENNAI #LOVE #MARRIAGE #COUPLE #ACCIDENT #SUICIDE #HUSBAND #WIFE #ORAGADAM