‘சென்னையிலிருந்து கோவைக்கு’... 'காரில் திரும்பியபோது'... ‘நொடியில் நேர்ந்த பரிதாபம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Nov 02, 2019 10:42 PM

அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, கன்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

car and container lorry accident man died near sulur

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் அலுவலகத்தில், உதவி நகரமைப்பு அலுவலராக பணிபுரிந்து வந்தவர் மனோகரன் (50). இவர் பணி நிமித்தமாக சென்னை சென்றிருந்தார். பின்னர், வாடகை காரில், கோவை நோக்கி வந்து கொண்டிருந்தார். சூலூர் அருகே கருமத்தம்பட்டி காவல் நிலையம் அருகே வந்த போது, கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது மோதியது. இதில், காரின் முன்னால் அமர்ந்திருந்த உதவி நகரமைப்பு அலுவலர் மனோகரன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கார் ஓட்டுநர் இயேசுதாஸ் படுகாயங்களுடன் உயிருக்கு போராடியநிலையில் கிடந்தார். இதைப்பார்த்த அங்கிருந்த மக்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து ஓட்டுநர் இயேசுதாஸை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கருமத்தம்பட்டி போலீசார், மனோகரனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #ACCIDENT #SULUR #COIMBATORE #CHENNAI #MAN