‘தடுமாறி விழுந்த இளம்பெண்’.. ‘நொடிப்பொழுதில் நடந்து முடிந்த கோர விபத்து’.. ‘அதிரவைக்கும் வீடியோ’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Nov 04, 2019 01:06 PM

இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த இளம்பெண் மீது தனியார் பேருந்து ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Hyderabad Video Woman Died in Two Wheeler Private Bus Accident

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த காவியா (26) என்ற பெண் சனிக்கிழமை காலை வங்கித் தேர்வு எழுதுவதற்காக தனது சகோதரருடன் இருசக்கர வாகனத்தில் கிளம்பியுள்ளார். அவர்கள் நல்லகுண்டா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது  காவியாவின் சகோதரர் கவனிக்காமல் சாலையில் இருந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்தை இறக்கியுள்ளார். இதில் நிலைதடுமாறி அவர்கள் இருவரும் சாலையில் விழுந்துள்ளனர்.

அப்போது அவர்களுக்கு அருகில் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றின் பின்பக்க சக்கரம் காவியாவின் மீது ஏறியுள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் காவியாவின் சகோதரர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் தனியார் பேருந்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Tags : #HYDERABAD #ACCIDENT #TWOWHEELER #BUS #CCTV #VIDEO #WOMAN #BROTHER