'தெருவில்’... ‘விளையாடிக் கொண்டிருந்த’... ‘3 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Nov 06, 2019 07:21 PM

விழுப்புரம் அருகே காய்கறி விற்கும் மினி வேன்  ஏறியதில், 3 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3 year old girl died while playing before the minivan

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே, விளந்தை கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆனந்தன் - ருக்குமணி தம்பதியினர். இவர்களுக்கு, 3 வயதில் போர்ஷிகா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இந்த குழந்தை தனது வீட்டின் அருகே, தெருவில் விளையாடிக்  கொண்டிருந்தது. அப்போது சாலையில், காய்கறி விற்பனை செய்யும், மினி சரக்கு வேன் ஒன்று வந்துள்ளது. வாகனத்தை தெருவில் நிறுத்திவிட்டு, காய்கறி வியாபாராத்தில், வியாபாரி ஒருவர் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்.

அந்த வாகனத்தின் முன்பகுதியில், சிறுமி போர்ஷிகா விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதை கவனிக்காத ஓட்டுநர் திருமலை (30) வாகனத்தை எடுக்க முயன்றபோது, முன்னாள் இருந்த டயரில் சிறுமி சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் பெற்றோர் கதறி அழுதனர். இதுதொடர்பாக, தகவல் அறிந்து வந்த மணலூர்பேட்டை போலீசார், வழக்குப்பதிவுசெய்து, ஓட்டுநர் திருமலை என்பவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ACCIDENT #DIED #MINIVAN