‘எரிந்து கிடந்த காருக்குள் இருந்த ஆண் சடலம்’.. ‘அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Nov 06, 2019 07:06 PM

கரூர் பரமத்தி அருகே காருக்குள் இருந்து எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Man Found Dead In Burned Out Car Near Karur Paramathi

கரூர் மாவட்டம் நொய்யல் பகுதியில் மனைவி, மகனுடன் வசித்து வந்த ரங்கசாமி என்பவர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு சொந்தமான கார் பரமத்தி அருகே உள்ள குப்பம் பகுதியில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த காரில் எரிந்த போன ஒரு ஆண் சடலமும் இருந்துள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் காருக்குள் எரிந்த நிலையில் இருந்தது காரின் உரிமையாளரான ரங்கசாமி தான் என்பதை உறுதி செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து காரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கார் எரிந்ததா? அல்லது தொழில் போட்டியால் ரங்கசாமி கொலை செய்யப்பட்டுள்ளாரா என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #KARUR #PARAMATHI #CAR #ACCIDENT #FIRE #MAN #BURNED #DEADBODY