‘சென்னையில் வாகன சோதனையின்போது’.. ‘விபத்தில் சிக்கிய இளம்பெண்’.. ‘வீடு திரும்பிய பின் செய்த அதிர்ச்சிக் காரியம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Nov 03, 2019 12:27 PM

வாகன சோதனையின்போது விபத்தில் சிக்கிய இளம்பெண் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பின் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Chennai Woman Who Injured in Accident During Checking Kills Self

சென்னை செங்குன்றத்தை அடுத்த சிவந்தி ஆதித்தன் நகரைச் சேர்ந்த யுவனேஷ் என்பவருடைய மனைவி பிரியதர்ஷினி (25). கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி மாலை செங்குன்றத்தில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த பிரியதர்ஷினியை வழியில் போலீஸார் வாகன சோதனைக்காக நிறுத்தியபோது, நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் மீது பின்னால் வந்த லாரி மோதி காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து உடனடியாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிரியதர்ஷினி தொடர்ந்து கால் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வழக்குப்பதிவு செய்துள்ள சோழவரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மன அழத்தம், மன உளைச்சல் உள்ளவர்கள் Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours), State suicide prevention helpline – 104 (24 hours), iCall Pychosocial helpline – 022-25521111 ( Mon – Sat, 8am – 10pm) போன்ற இலவச ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொண்டு பேசினால் அதிலிருந்து வெளிவர ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

Tags : #CHENNAI #WOMAN #ACCIDENT #POLICE #SUICIDE #INJURY #LEG