‘இது அவளுக்கு ரொம்ப பிடிக்கும்’... ‘மகளின் இறுதிச் சடங்கில்’... ‘பாசம் நிறைந்த’... ‘தந்தை செய்த காரியம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Nov 07, 2019 09:08 AM

சென்னையில் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த இளம்பெண்ணின் இறுதிச் சடங்கில், பாசம் நிறைந்த தந்தை செய்த காரியம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

dad sing favourite song for him daughter\'s funeral

ஆவடி அருகே பட்டாபிராம் காந்திநகரைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற காவலர் தாமஸின் மகள் மெர்சி (21). இவருக்கும், இவரது சொந்த அத்தை மகனான அப்புக்கும் (24), சிறுவயது முதலே நன்றாக பழக்கம் இருந்ததால், கடந்த அக்டோபர் 2-ம் தேதிதான் நிச்சயதார்த்தம் முடிந்து, ஜனவரியில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இவர்கள், வெளியே செல்லலாம் என்று நினைத்து, சென்னை - மீஞ்சூர் சாலையில் சென்றபோது, வயலில் ஃபோட்டோ எடுக்கலாம் என்று எண்ணி பைக்கை நிறுத்துவிட்டு சென்றனர்.

அப்போது நீச்சல் தெரியாதநிலையில், பிரபல சீரியலில் வருவதுபோன்று, அங்கிருந்த கிணற்றின் படிக்கட்டில் இறங்கி, கால்நினைக்க மெர்சி நினைத்து, அப்புவை அழைத்துள்ளார். அவர் மறுத்தபோதும், மெர்சியின் ஆசைக்காக கிணற்றில் இறங்கினர். அப்போதுதான் படிக்கட்டில் இருந்து மெர்சி தவறிவிழ, அவரை பிடிக்கப் போய் இருவரும் தண்ணீருக்குள் மூழ்கினர். இதில் மெர்சி உயிரிழந்தார். விவசாயின் உதவியால் அப்பு காப்பாற்றப்பட்டார்.

இந்நிலையில், பட்டாபிராம் தேவாலயத்தில் உள்ள பாடக் குழுவில், மெர்சி இருந்து வந்ததால், அழகாக பாடுவார் என தெரியவந்துள்ளது. இதனால் தேவலாயத்திற்கு  வரும் அனைவருக்கும் தெரியும் என்பதால், சோகமடைந்த அவர்கள், மெர்சியின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டனர். அப்போது மெர்சியின்  தந்தை, 'என் அன்புமகளை, பரலோக ராஜ்ஜியத்தில் மனமகிழ்ச்சியாக வைத்திருப்பார்’ என்று பிரார்த்தனை செய்தார். அதைத் தொடர்ந்து மெர்சிக்கு ரொம்பப் பிடித்த கிறிஸ்தவப் பாடலான ‘அல்லேலுயா, துன்பமும் துயரமும் வேதனையோ உம்மை விட்டு’.... என்று தொடங்கும் பாடலைக் கண்ணீர்மல்க பாடினார்.

அதைக்கேட்ட அனைவரும் கண்ணீரோடு அந்தப் பாடலைப் பாடினர். மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்த அப்பு, மெர்சியின் உடலைப் பார்த்து கண்ணீர்விட்டு கதறி அழுதார். சிலநேரங்களில், ஆபத்தை உணராமல் நாம் எடுக்கும் சில விஷயங்கள் விபரீதத்தில் முடிவதுடன், நம்மை சேர்ந்தவர்களை அது மிகவும் பாதிக்கும் என்பதை நாம் உணரவேண்டும் என்று போலீசார் கூறுகின்றனர்.

Tags : #ACCIDENT #DIED #FATHER #DAUGHTER #CHENNAI #WEDDING #BETROTHAL