'இதுக்குத்தான் என்ஜினீயரிங் படிச்சியா'?... 'கதறிய குடும்பம்'... பேஸ்புக்கில் இளைஞர் செய்த அட்டுழியம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Mar 05, 2020 09:32 AM

கஷ்டப்பட்டு என்ஜினீயரிங் படிக்க வைத்ததை மறந்துவிட்டு, பேஸ்புக்கில் குழந்தைகளின் ஆபாச படங்களை வைத்து இளைஞர் செய்த செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Police arrested Engineering graduate for sharing Pornographic videos

தர்மபுரி வெண்ணாம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சோழராஜன். இவருடைய மகன் சீனு. 26 வயது இளைஞரான இவர், என்ஜினீயரிங் படித்துவிட்டு ஓசூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் தரம் பார்க்கும் பிரிவில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கம் கொண்ட சீனு, கடந்த ஆண்டு தனது செல்போனில் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து வைத்து பார்த்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் தான் பதிவிறக்கம் செய்த குழந்தைகளின் ஆபாச படங்களை பல்வேறு முகநூல் பக்கங்களில் பகிர்ந்து வந்துள்ளார். இதற்கிடையே குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் மற்றும் பரப்பும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழக காவல்துறையின் கண்ணில் சீனு சிக்கினார். சீனுவின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வந்த குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தினர் சென்னை சைபர் கிரைம் போலீசாருக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து  சைபர் கிரைம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தி, அதுகுறித்த தகவலை தர்மபுரி சைபர் கிரைம் போலீசாருக்கு அளித்தனர். இதனைத்தொடர்ந்து குழந்தைகளின் ஆபாச படங்கள் மற்றும் பிற ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து, அவற்றை முகநூலில் சீனு பகிர்ந்து வந்ததை உறுதி செய்த காவல்துறையினர் என்ஜினீயர் சீனுவை நேற்று கைது செய்தனர்.

சீனு கைதுசெய்யப்பட்டது அவரது குடும்பத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்காகவா உன்னை கஷ்டப்பட்டு என்ஜினீயரிங் படிக்க வைத்தேன் என அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள்.

Tags : #POLICE #TAMILNADUPOLICE #SEXUALABUSE #PORNOGRAPHIC #ENGINEERING GRADUATE