'சென்னையில் கல்லூரி மாணவியை’... ‘பாலியல் வன்கொடுமை செய்த’... ‘பிரபல நடிகரின் மகன் கைது’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Mar 04, 2020 06:01 PM

கல்லூரி மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் பிரபல நடிகர் சூர்ய பிரகாஷின் மகன் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Famous Actor\'s Son Arrested in Chennai Harassment Complaint

தூறல் நின்னு போச்சு, வசந்த காலம் உள்ளிட்ட பல படங்களில் குணசித்திர வேடம் முதல் வில்லன் நடிகர் என அனைத்திலும் நடித்திருப்பவர் சூர்ய பிரகாஷ் என்கிற சூர்யகாந்த். 25 வயதாகும் இவரது மகன் விஜய் ஹரீஸ், ‘நாங்களும் நல்லவங்கதான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தேனாம்பேட்டையில் கல்லூரி ஒன்றில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்துவரும் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மாணவி ஒருவர், தன்னை பாலியல் வன் கொடுமை செய்ததாக விஜய் ஹரீஸ் மீது புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த மாணவியுடன் விஜய் ஹரீஸ் பழகி வந்தநிலையில், கடந்த ஜனவரி மாதம் விருகம்பாக்கத்தில் இருக்கும் தனது வீட்டுக்கு மாணவியை அழைத்து சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துக்கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

பின்னர் பாலியல் வன்கொடுமை செய்ததை வீடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிடுவதாக மிரட்டி பலமுறை அந்த மாணவியுடன் தனிமையில் இருந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து மாணவியின் புகாரின் அடிப்படையில், வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நடிகர் விஜய் ஹரீஸை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SEXUALABUSE #COLLEGESTUDENT #ACTOR #CHENNAI #வண்ணாரப்பேட்டை