‘மொட்டை மாடியில் கேட்ட அலறல்’.. 8ம் வகுப்பு மாணவி மீது ‘ஒருதலைக்காதல்’.. சென்னை வாலிபர் செய்த கொடுமை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் ஒருதலைக்காதலால் 8ம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுக்க முயன்று தப்பிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை அமைந்தகரை முத்துமாரியம்மன் காலனியில் வசித்து வருபவர் நித்தியானந்தன். இவர் வசிக்கும் வீட்டின் மாடியில் 8ம் வகுப்பு மாணவி அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமை மாலை வீட்டின் மொட்டை மாடியில் இருந்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது நித்தியானந்தன் அந்த பள்ளி சிறுமியின் கழுத்தில் கத்தியால் அறுக்க முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் வருவதைப் பார்த்த நித்தியானந்தன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதனை அடுத்து மாணவியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த சிறுமியை நித்தியானந்தன் ஒருதலையையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பள்ளி முடிந்து மொட்டை மாடியில் தனியாக இருந்த சிறுமியிடம் நித்தியானந்தன் தன்னை காதலிக்க சொல்லி தொல்லை செய்ததாகவும், அதற்கு சிறுமி மறுக்கவே தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிறுமியின் கழுத்தை அறுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தப்பியோடிய நித்தியானந்தனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
