வீட்டை எதிர்த்து 'காதல் திருமணம்' செய்த பெண்ணை... வேறு ஒருவருக்கு 'திருமணம்' செய்து வைத்த பெற்றோர்... தட்டிக்கேட்ட 'முதல் கணவருக்கு' நேர்ந்த விபரீதம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Mar 04, 2020 12:35 PM

வீட்டைவிட்டு வெளியேறி காதல் திருமணம் செய்த பெண்ணின் மனதை மாற்றி, அவரை வேறு ஒருவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Clash Between Two side Near Dharmapuri, Police Investigate

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் விமல்குமார்(29) இவர் அதே பகுதியை சேர்ந்த 20 வயது பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். காதலுக்கு இருவீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த 26-ம் தேதி இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து இரு தரப்பு பெற்றோர்களும் சமாதானம் ஆனதாக தெரிகிறது.

இந்த நிலையில் அந்த பெண்ணை அவர்களின் பெற்றோர் வீட்டிற்கு கூட்டிச்சென்று அவரின் மனதை மாற்றி வேறு ஒருவருக்கு அவரை திருமணம் செய்து வைத்துள்ளனர். இதையறிந்த விமல்குமார் அதிர்ச்சி அடைந்து தன்னுடைய உறவினர்களுடன் பெண்ணின் வீட்டிற்கு சென்று இதுகுறித்து நியாயம் கேட்டுள்ளார். அப்போது இரண்டு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் விமல்குமாரின் வீட்டை பெண் தரப்பினர் அடித்து நொறுக்கியுள்ளனர்.

தொடர்ந்து இரண்டு தரப்பினரும் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்தனர். இதையடுத்து இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் இரண்டு தரப்பிலும் 25 பேர்மீது வழக்குப்பதிவு செய்து கலைச்செல்வன்(30) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவான மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags : #POLICE