‘20 வயசு மகளையும் கேட்டேன்.. அவ சம்மதிக்கல!’.. ‘கள்ளக் காதலனால்’ கணவருக்கு நேர்ந்த ‘கொடூரம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jan 03, 2020 07:53 PM

நாமக்கல் மாவட்டம் வெண்ணாந்தூரில் தினசரி மார்க்கெட் பிள்ளையாட் கோவிலைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (55). கட்டிடங்களுக்கு செண்ட்ரிக் வேலை பார்த்து கொடுக்கும் இவரது மனைவி வசந்தா(45)வுக்கும் இவருக்கும் 21 வயதில் ஒரு மகனும், 20 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

Man murdered his affairs husband in Namakkal

இந்நிலையில் குடும்பக் கஷ்டம் காரணமாக தாரமங்கலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டியில் உள்ள ராமச்சந்திரன் என்கிற ராம்ஜெத்மலானியை சந்தித்து உதவி கோரியுள்ளார் வசந்தா. அப்போது ராமச்சந்திரனோ, அவரிடம்,  ‘பரிகாரம் செய்தால் குடும்பக் கஷ்டம் எல்லாம் சரியாகிவிடும்’ என்று கூறி வசந்தாவின் போன் நம்பரை பெற்றிருக்கிறார்.

தொடர்ந்து, வசந்தாவுக்கு அடிக்கடி போன் செய்து பேசியுள்ளார். ஒரு கட்டத்தில் இதை அறிந்த கிருஷ்ணன் இதை கண்டித்துள்ளார். அதன் பிறகு ஒருநாள் கிருஷ்ணனின் வீட்டுக்கு போதையில் வந்த ராமச்சந்திரன், அங்கிருந்த கிருஷ்ணனின் மகனுடன் கிருஷ்ணனுடனும் தகராறு செய்துவிட்டு, தான் வைத்திருந்த கத்தி கொண்டு கிருஷ்ணனை குத்திக் கொன்றுவிட்டு தப்பியோடிவிட்டார்.

அதன் பிறகு ராசிபுரம் போலீஸார் ராமச்சந்திரனை பிடித்து விசாரித்தபோதுதான், ராமச்சந்திரன் வசந்தாவிடம் மாந்திரீகத்தின் மூலம் குடும்பக் கஷ்டத்தைப் போக்குவதாகக் கூறி, மெல்ல மெல்ல கள்ள உறவு வைத்துக் கொண்டிருந்ததும், அடிக்கடி வசந்தாவின் வீட்டுக்கு கிருஷ்ணன் இல்லாத நேரமாக பார்த்து ராமச்சந்திரன் வந்து போனதும் தெரியவந்தது.

மேலும் ராமச்சந்திரன் வசந்தாவிடம் குழைந்து பேசி, வசந்தாவின் மகளையும் வசப்படுத்த நினைத்ததும், அதற்கு சம்மதிக்காத வசந்தாவிடம் பேச கிருஷ்ணனின் வீட்டுக்கு வந்த ராமச்சந்திரன், அங்கு ஏற்பட்ட தகராறில் கிருஷ்ணனைக் கொன்றுவிட்டு தப்பியோடியதும் தெரியவந்ததை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : #MURDER #HUSBANDANDWIFE #NAMAKKAL