'கள்ளுக்கடை', சுற்றுலா... 17 கொலைகள்... இந்தியாவின் மிகப்பெரிய 'சீரியல்' கில்லர்... சிக்கிய பின்னணி!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Manjula | Dec 28, 2019 11:32 PM
இந்தியாவின் மிகப்பெரிய சீரியல் கில்லர் யெருகலி ஸ்ரீனு என்பவரை, தெலுங்கானா போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 17-ம் தேதி தெலங்கானாவின் மஹ்புப் நகர் மாவட்டம் டோக்கூர் கிராமத்தை சேர்ந்த, கால்வாய் அருகே, பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக போலீஸுக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து கடந்த 10 தினங்களாக போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. விசாரணையின் அடிப்படையில் அதே பகுதியை சேர்ந்த யெருகலி ஸ்ரீனு என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், '' கடைசியாக அப்பெண் கள்ளுக்கடை ஒன்றில் மது அருந்தியுள்ளார். அப்போது ஸ்ரீனு அவரிடம் பேச்சுக்கொடுத்து நண்பர் ஆகியுள்ளார். பின்னர் கள்ளுக்கடையில் இருந்து இருவரும் ஒன்றாக வெளியில் சென்றுள்ளனர். அப்போது அவரைக் கொலை செய்துவிட்டு அவரது நகைகளை எடுத்துக்கொண்டு ஸ்ரீனு தப்பிவிட்டார்.
எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருக்கும் ஸ்ரீனு 17 கொலைகளை செய்ததாக போலீஸ் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறார். 2007-ம் ஆண்டு தனது தம்பியை கொலை செய்த குற்றத்தில் ஆயுள்தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார் என்றாலும் இரண்டே ஆண்டுகளில் சிறையில் இருந்து தப்பியுள்ளார். ஒரு சில நாட்களில் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2013-ல் நன்னடத்தை விதியின் கீழ் விடுவிக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியேவந்த பிறகும் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடத் தொடங்கினார்.
கள்ளுக்கடைக்கு வரும் பெண்கள் தான் அவரது டார்கெட். அவர்களிடம் நைஸாக பேச்சுக்கொடுத்து பழக்கமான பின்னர், சுற்றுலா அழைத்துச்சென்று அவர்களை கொலை செய்வதுதான் ஸ்ரீனுவின் ஸ்டைல். அவர்களிடம் நகைகளை பறித்துக்கொண்டு எஸ்கேப் ஆகிவிடுவார். இதே ஸ்டைலில் கடந்த 2014, 2015 ஆண்டுகளிலும் கொலைகள் நடந்துள்ளன. 2015-ம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். 2018-ம் ஆண்டு விடுதலையாகி வந்த பின்னர் இதே ஸ்டைலில் 4 கொலைகள் செய்துள்ளான். அனைத்து குற்றங்களும் நிரூபிக்கப்பட்டால் இந்தியாவின் மிகப்பெரிய சீரியல் கில்லர் ஸ்ரீனு தான்.
இதில் 11 வழக்குகளில் போதிய ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் அந்த வழக்குகளை தள்ளுபடி செய்துள்ளது. எனினும் இந்தமுறை விசாரணையில் பல குற்றங்களை ஒப்புக்கொண்டு இருக்கிறான். இந்தமுறை நிச்சயம் அவனுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்,'' என தெரிவித்துள்ளனர்.