‘கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு’!.. குற்றவாளிக்கு தூக்கு தண்டனை..! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 27, 2019 04:41 PM

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Coimbatore child murder case court order death sentence to criminal

கோவை மாவட்டம் துடியலூர் அருகே பன்னிமடையில் 1ம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுமி கடந்த மார்ச் மாதம் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அப்பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கோவையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

விசாரணையில் சந்தோஷ் மீதான குற்றம் நிரூபணமானதால் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை அடுத்து இன்று பிற்பகல் தண்டனை விவரத்தை நீதிபதி ராதிகா அறிவித்தார். அதில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 302 பிரிவின் கீழ் சந்தோஷ்குமாருக்கு ஆயுள் மற்றும் தூக்கு தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் இந்த வழக்கில் மற்றொரு நபருக்கு தொடர்பு இருப்பதாக சிறுமியின் தாய் நீதிமன்றத்தில் மனு கொடுத்ததை அடுத்து, அந்த நபரையும் கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோஷங்களை எழுப்பினர்.

இது தொடர்பான செய்தி: ‘இன்னொரு டி.என்.ஏ-வும் கலந்துருக்கு’!.. ‘கை, காலை கட்டி பாலியல் வன்கொடுமை’!.. கோவை 1ம் வகுப்பு சிறுமி கொலையில் திடீர் திருப்பம்..!

Tags : #SEXUALABUSE #MURDER #COIMBATORE #CHILD #DEATH #SENTENCE #COURT