‘மது பழக்கத்தில்’ இருந்து மீள உதவிய ‘மனைவி!’.. ‘கழுத்தை நெரித்துக் கொன்ற கணவர்!’.. ‘மிரள வைக்கும்’ காரணம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jan 03, 2020 05:11 PM

ஜி.பி.ரோட்டில் வாஷிங் மிஷின் சர்வீஸ் பணியில் இருந்து வருபவர் தனசேகர். இவர் தனது மனைவி அம்சா(38), மற்றும் 14 வயது மகளுடன் சென்னை  கொளத்தூர் பாலகுமாரன் நகரில் வசித்து வந்தார். இவர் தினமும் வீட்டுக்கு குடித்துவிட்டு வந்துகொண்டிருந்துள்ளார். ஆனாலும் பொறுமையாக இந்த விஷயத்தை கையாண்ட அம்சா, தனது கணவரை மறுவாழ்வு மையத்துக்கு அழைத்துச் சென்று, அவர் குடிப்பழக்கத்தில் இருந்து வெளியேற முயன்றுள்ளார்.

Chennai Husband kills wife after recused from drug addiction

அதன் பிறகு தனசேகரிடம் மெல்ல மெல்ல மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன. நேற்றைய தினம் வழக்கம் போல, சிகிச்சைக்கு சென்று திரும்பிய தனசேகர், இரவு அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது அம்சாவின் கழுத்தை நெரிக்கத் தொடங்கியுள்ளார். அம்சா மூச்சு முட்டிய திணறியபோதும், தனசேகர் விடாமல், அம்சாவின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். 

அதன் பிறகு தனசேகர் காலையில் சென்றுவிட்டார். இதனையடுத்து தூக்கத்தில் இருந்து எழுந்த தனசேகரின் மகள், அம்மா அம்சா நீண்ட நேரம் ஆகியும் எழாததால், எழுப்பிப் பார்த்துள்ளார். ஆனாலும் அம்சா பேச்சு மூச்சின்றி இருந்ததால், அப்பெண் தன் தாத்தாவுக்கு போன் செய்து கூறியுள்ளார்.  உடனே விரைந்த அம்சாவின் தந்தை வேலுசாமி, அம்சாவை மருத்துவமனை அழைத்துச் செல்ல அவர்களோ, அம்சா இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

அதிர்ந்துபோன அம்சாவின் உறவினர்கள் கொளத்தூர் போலீஸாரிடம் அளித்த புகாரின் பேரில், தனசேகர் மீது சந்தேகித்த போலீஸார் அவரை விசாரித்ததில், மதுவுடன் சேர்ந்து போதைப் பழக்கமும் கொண்டிருந்த தனசேகர் திடீரென அவற்றை கைவிட்டதால், வழக்கத்தில் இருந்து மாறுபட்டு சற்றே வித்தியாசமாக நடந்துள்ளதாகக் கூறி அதிர வைத்துள்ளனர். தன் மனைவியை தெரியாமல் கொன்றுவிட்டதாகக் கூறி அழுவதாகவும், மகளின் எதிர்காலத்தை நினைத்து அவர் அழுவதாகவும் அவர் கூறுவதாக போலீஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் தனசேகரின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருப்பதாகக் கூறும் போலீஸார், அவர் மனைவியை கொலை செய்ததால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Tags : #CHENNAI #HUSBANDANDWIFE #MURDER