‘தகாத’ உறவை துண்டித்தும் ‘தொந்தரவு’... ‘குடும்பமே’ சேர்ந்து செய்த காரியம்... சென்னையில் நடந்த ‘அதிர்ச்சி’ சம்பவம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Dec 30, 2019 02:38 PM

சென்னையில் தகாத உறவால் ஏற்பட்ட பிரச்சனையில் ஒருவரைக் கொலை செய்த கணவன், மனைவி உட்பட 4 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

Chennai Man Killed Over Affair Issue Husband Wife Family Arrested

சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி தேவி - சங்கர். சின்னத்திரை தொடர்களில் துணை நடிகையாக வேலை செய்துவந்த தேவிக்கு ரவி என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தேவி திடீரென அந்த உறவை துண்டித்ததால், நேற்று இரவு அவருடைய வீட்டிற்கே வந்து ரவி தகராறு செய்துள்ளார்.

அப்போது தேவி, அவருடைய கணவர் சங்கர், தேவியின் சகோதரி லட்சுமி, அவருடைய கணவர் சவாரியா ஆகிய 4 பேரும் சேர்ந்து ரவியை உருட்டுக்கட்டையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து தேவி, சங்கர் உட்பட 4 பேரும் நடந்ததைக் கூறி ராஜமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

Tags : #CRIME #MURDER #CHENNAI #HUSBAND #WIFE #AFFAIR