‘ஓவர்டேக் செய்தபோது நடந்த விபரீதம்’!.. ‘லாரிக்கு அடியில் சிக்கிய கார்’.. குழந்தை உட்பட 5 பேர் பலியான பரிதாபம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Dec 29, 2019 08:32 PM
நாமக்கல் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் அடுக்கம்பாறையை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் குடும்பத்தினருடன் காரில் சென்றுகொண்டு இருந்துள்ளார். புதுச்சத்திரம் அடுத்த ரெட்டிப்புதூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது முன்னால் சென்ற வாகனத்தை சிவக்குமார் முந்த முயன்றுள்ளார். அப்போது எதிர்பாரதவிதமாக சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரிக்கு பின்னால் மோதியுள்ளது.
இந்த விபத்தில் சிவக்குமார், அவரது மனைவி தேவி ப்ரியா, 5 வயது குழந்தை உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். தகவலறிந்து வந்த போலீசார் காருக்குள் சிக்கிய உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: ‘குழியில் சிக்கி வெடித்த டயர்’!.. ‘தூக்கி வீசப்பட்ட மாணவர்கள்’!.. நெஞ்சை பதறவைத்த சம்பவம்..!