‘இன்னொரு டி.என்.ஏ-வும் கலந்துருக்கு’!.. ‘கை, காலை கட்டி பாலியல் வன்கொடுமை’!.. கோவை 1ம் வகுப்பு சிறுமி கொலையில் திடீர் திருப்பம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 27, 2019 11:37 AM

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக சிறுமியின் தாய் நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார்.

Coimbatore child abuse murder case another person suspect

கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த பன்னீர்மடை பகுதியை சேர்ந்த 1ம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுமி கடந்த மார்ச் மாதம் திடீரென காணாமல் போனார். இதனை அடுத்து, அடுத்த நாள் வீட்டுக்கு எதிரே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நடந்த பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழக்கப்பட உள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கில் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக சிறுமியின் தாய் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். குழந்தையின் உடலில் சந்தோஷின் டி.என்.ஏ மட்டுமல்லமால் இன்னொருவரின் டி.என்.ஏ படிவமும் கலந்திருப்பது டி.என்.ஏ ரிப்போர்ட்டில் வந்திருப்பதாக தெரிவித்துள்ளார். இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், சிறுமியின் தாய் அளித்த மனு திடீர் திருப்பமாக அமைந்துள்ளது.

மேலும் படிக்க: ‘13-வது மாடிக்கு சிமெண்ட் எடுத்து சென்ற இளைஞர்’!.. ‘திடீரென உடைந்த பலகை’!.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து..!

Tags : #SEXUALABUSE #MURDER #COIMBATORE #CHILD