பரிகாரம் செய்வதாகக் கூறி... வீட்டுக்கு வந்த ஜோசியரால்... மனைவிக்கு நிகழ்ந்த தொந்தரவு... தட்டிக் கேட்ட கணவருக்கு நடந்த விபரீதம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Dec 31, 2019 09:15 PM

நாமக்கல் அருகே பரிகாரப் பூஜை செய்வதாகக் கூறி, மனைவிக்கு செல்ஃபோன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்த ஜோசியரை தட்டிக் கேட்டதால் கணவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

namakkal man stabbed to death by josiyar due to upbraid

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணன் - வசந்தா தம்பதியர். கட்டிட வேலை செய்து வந்த கிருஷ்ணன், கடன் நெருக்கடி மற்றும் குடும்பப் பிரச்சனையால் தவித்து வந்துள்ளார். இதனை தீர்க்க, சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி பகுதியில் ஜோசியம் மற்றும் மாந்திரீகம் செய்துவந்த ராமச்சந்திரன் என்பரை சில மாதங்களுக்கு முன் அணுகியுள்ளார். அவரும் பிரச்சனைகள் தீர்வதற்கு வீட்டில் சில பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் எனக் கூறி கிருஷ்ணன் வீட்டுக்கு வந்துள்ளார்.

அங்கு சில பரிகார பூஜைகள் செய்த அவர், சில சடங்குகள் தொடர்பாக பேச வேண்டி வசந்தாவின் செல்போன் எண்ணை வாங்கிச் சென்றதாகத் தெரிகிறது. அதன்பின்பு ஜோசியர் ராமச்சந்திரன், வசந்தாவிடம் ஆபாசமாகப் பேசத் தொடங்கியுள்ளார். இதனால் அதிர்ந்துப்போன அவர், உடனடியாக தனது கணவரிடம் கூற, அவர் ஜோசியர் ராமச்சந்திரனை அழைத்து கண்டித்துள்ளார். அதன்பிறகும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால், கிருஷ்ணன் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார், ஜோசியர் ராமச்சந்திரனை அழைத்து கண்டித்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

இதனால் ஆத்திரத்தில் இருந்த ராமச்சந்திரன், திங்கட்கிழமை இரவு குடி போதையில் வந்த ஜோசியர் ராமச்சந்திரன், கிருஷ்ண‌னை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடியுள்ளார். பின்னர் கிருஷ்ணனை மீட்ட அக்கம்பக்கத்தினர், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்தக் காட்சிகள் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து வரும் போலீசார், தப்பியோடிய ஜோசியர் ராமச்சந்திரனை தேடி வருகின்றனர்.

Tags : #STABBED #MURDERED #KILLED #NAMAKKAL