'37 வயது' மாப்பிள்ளை... '17 வயது' பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்.. தலைமறைவான தாய்.. கரூரில் நடந்த பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Dec 27, 2019 03:59 PM

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்த 37 வயது நபர் ஒருவருக்கு 17 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Namakkal Man, 37 arrested for marrying 17 yrs old girl

குழந்தைத் திருமணம் இன்னும் ஆங்காங்கே நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது என்பதற்கு சாட்சியாய், கரூர் மாவட்டத்தில் இந்த கொடுமை அரங்கேறியுள்ளது. ஆம், 37 வயதான ஜெய லட்சுமணன் என்பவர் நாமக்கல் பரமத்தி வேலூரில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இவருக்கு வயதாகிவிட்டதால் யாரும் திருமணத்துக்கு பெண் கொடுக்க முன்வரவில்லை என்பதால், ஜெயலட்சுமணனின் தாயார் நல்லம்மாள், கரூரில் உள்ள பழனிச்சாமி மற்றும் லதா தம்பதியரின் 17 வயது மகளை தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்கக் கோரியுள்ளார். மேலும் அவர்களிடம் சில ஆசை வார்த்தைகளையும் அவர் கூறி, தன் மகனுக்கு அந்த குழந்தையை திருமணம் செய்துவைத்துள்ளார்.

அதன் பின் கரூர் சைல்டு லைனுக்கு வந்த தகவலை அடுத்து, அவர்கள் விரைந்து சென்று விசாரித்ததில், தனக்கு கட்டாயத் திருமணம் செய்துவைத்துவிட்டதாக சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள், சிறுமியின் தாய்தந்தையர், உறவினர் மற்றும் ஜெய லட்சுமணன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஜெயலட்சுமணனின் தாயார் நல்லம்மாள் தேடப்பட்டு வருகிறார்.

இதையும் படிங்க..

‘நீ அந்த ஃபோட்டோஸ்லாம் அனுப்பு.. பாலிவுட் நடிகை மாதிரி இருப்ப!'.. பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

Tags : #MARRIAGE #CHILD #NAMAKKAL #KARUR