‘எனக்கே பிள்ளை இல்ல உனக்கு பிள்ளையா’... பெண் செய்த ‘நடுங்க’ வைக்கும் காரியம்... ‘உறைந்துபோய்’ நின்ற குடும்பத்தினர்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Dec 29, 2019 04:57 PM

தூத்துக்குடியில் பெண் ஒருவர் 6 மாத குழந்தையைக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tuticorin Mentally Disturbed Woman Murdered 6 Month Old Boy Baby

தூத்துக்குடி முல்லைநகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த தம்பதி செல்வராஜ் - நந்தினி. இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், செல்வகணேஷ் என்ற 6 மாத ஆண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. இந்நிலையில் வழக்கம்போல செல்வராஜ் வேலைக்குச் சென்றுவிட, குழந்தைக்கு பால் கொடுத்த நந்தினி தொட்டிலில் தூங்க வைத்துள்ளார். சிறிது நேரத்தில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைக் காணவில்லை என நந்தினி சத்தம்போட, அதைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர்.

இதையடுத்து நந்தினியின் குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் குழந்தையைத் தேடிப் பார்த்தபோது, குழந்தை வீட்டின் பின் இருந்த கிணற்றில் கிடந்துள்ளது. அதைப் பார்த்து உறைந்துபோன அவர்கள் உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், நந்தினியின் வீட்டில் கடந்த சில நாட்களாக தங்கியிருந்த அவருடைய அத்தை பஞ்சவர்ணம்தான் குழந்தையை கிணற்றில் வீசிக் கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன் பஞ்சவர்ணத்திற்கு பிறந்த ஒரு ஆண் குழந்தை, தாய்ப்பால் குடித்துக்கொண்டிருக்கும்போது மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளது. அந்த அதிர்ச்சியில் அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக நந்தியின் வீட்டில் தங்கியிருந்த பஞ்சவர்ணம், ‘எனக்கே பிள்ளை இல்ல. உனக்கு பிள்ளையா’ என அடிக்கடி கூறி வந்ததாகவும், மனநிலை பாதிக்கப்பட்டதால் அத்தை அப்படி பேசுகிறார் என நந்தினி அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை எனவும் அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர். இதுகுறித்து நந்தினியின் கணவர் செல்வராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பஞ்சவர்ணத்தை கைது செய்துள்ளனர். விசாரணைக்குப் பிறகு அவர் மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்படுவார் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : #CRIME #MURDER #BABY #MOTHER #AUNTY